சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா, சோனா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சோனா கல்வி நிறுவன தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இந்திய கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் தடகளப் போட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாய் கிஷோர் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.