சேலம் மத்திய சிறையில் 48 முஸ்லிம் கைதிகள் ரமலான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இவர்களுக்காக சிறைத்துறை நிர்வாகம் சிறப்பு தொழுகை நடத்தவும், நோன்பு கஞ்சி தயாரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. நோன்பு கஞ்சிக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வெளியில் உள்ள ஜமாத் மூலம் வழங்கப்படுகிறது. மேலும், முஸ்லிம் கைதிகள் தினமும் சிறப்பு தொழுகையில் ஈடுபட வசதியாக தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.