சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணிய சாமி கோவிலில் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மாலையில் தங்ககவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.
சேலம் பெரமனூரில் உள்ள கந்தசாமி ஆறுமுகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் ஊத்துமலை முருகன் கோவில், கந்தாஸ்ரமம் கோவில் உள்பட சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாக திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.