சேலத்தில் பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

0பார்த்தது
சேலத்தில் பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
சேலத்தில் ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் நந்திக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை தாயாருடன் நந்தி வாகனத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி