சேலம் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள்

1பார்த்தது
சேலம் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள்
அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, ரயில்வே நிர்வாகம் சேலம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டனத்தில் இருந்து ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் வருகிற 14, 21, 28-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 26-ந் தேதி, ஜனவரி மாதம் 2-ந் தேதிகளிலும் வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி