சேலம்: பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

70பார்த்தது
சேலம்: பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக 48 விடுதிகள் உள்ளன. 

இதில் பள்ளிகளுக்கு 37 விடுதிகளும், கல்லூரிகளுக்கு 11 விடுதிகளும் அடங்கும். பள்ளி விடுதிகளுக்கு சேருவதற்கு 4 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர், மாணவிகளும், கல்லூரி விடுதிகளுக்கு பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவர், மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். 

பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதிமுறைகள் மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி