சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மஞ்சள் கல்பட்டியில் திடீரென கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க ஓரமாக ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மேலும் சிரமத்திற்கு ஆளாகினர்.