சேலத்தில் கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

82பார்த்தது
சேலத்தில் கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் கே. என். பிரதர்ஸ் கைப்பந்து கிளப் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம் மகுடஞ்சாவடியில் நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சேலம் அழகாபுரத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில், மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், ஆலோசகர் விஜயராஜ், இணைச்செயலாளர் வடிவேல், துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் விஜயகுமார், நிர்வாகிகள் வேங்கையன், நந்தன், பயிற்சியாளர் கோகுலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி