சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கந்தம்பட்டி பிள்ளையார் நகர் பகுதியில் ரூ. 4½ லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆணையாளர் இளங்கோவன் இந்தப் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜல்லி கற்கள், தார் சரியான அளவு கலக்கப்படுகிறதா என்பதை அவர் ஆய்வு செய்தார். மேலும், பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.