டாஸ்மாக் ஊழியர்கள் கடை திறக்காமல் 2வது நாளாக போராட்டம்

559பார்த்தது
டாஸ்மாக் ஊழியர்கள் கடை திறக்காமல் 2வது நாளாக போராட்டம்
தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 கடைகளை மூட தமிழக அரசு அறிவித்தது. இதனிடையே, காலி மதுபாட்டில்களை வாங்க மாட்டோம் என டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நேற்று சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 174 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அந்தியூர் டாஸ்மாக் குடோன் முன்பும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி