சேலம், நெத்திமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்த கிருபா லட்சுமி (49) நேற்று காலை தனது கணவருடன் ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். வ.உ.சி. சாலை அருகே டேங்கர் லாரி ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதில், கிருபா லட்சுமி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.