சேலம் அன்னதானப்பட்டி பந்தல் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபி (26) என்பவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் இறந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால், நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்களால் மீட்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.