மண்டல பூஜை விழாவிற்கு முகூர்த்தக்கால் நாளை நடப்படுகிறது

0பார்த்தது
மண்டல பூஜை விழாவிற்கு முகூர்த்தக்கால் நாளை நடப்படுகிறது
சேலம் ஸ்ரீ சாஸ்தாநகரில் உள்ள அய்யப்பா ஆசிரம அறக்கட்டளை தலைவர் கே. பி. நடராஜன், செயலாளர் சண்முகம், பொருளாளர் சரவண பெருமாள் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், வருகிற 17-ந் தேதி கார்த்திகை முதல் தேதி முதல் தை மாதம் 15-ந் தேதி வரை மண்டல பூஜை, உற்சவ பூஜை மற்றும் மகர ஜோதி, திருஆபரண தரிசனம் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். நாளை (திங்கட்கிழமை) காலை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு மாலை அணிவித்தல், இருமுடி கட்டுதல், நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து கோவிலில் இருந்து சபரிமலை செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் 4, 500 முதல் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமாநில பக்தர்கள் பாதயாத்திரையாக வர இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகள் கோவில் அறக்கட்டளை சார்பில் செய்து கொடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி