சேலம் கோட்டை ஹபீப் தெருவைச் சேர்ந்த முகமது ரபி, வரதப்பன் தெருவில் நடத்தி வரும் மளிகைக்கடையில் ரூ. 80 ஆயிரம் திருடப்பட்டது தொடர்பாக சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த பிரதாப் (33) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே அடிதடி, திருட்டு என 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருட்டு வழக்கில் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சூரமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 13-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த முதல் நாளிலேயே மளிகைக்கடையில் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதானவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.