சுதந்திரா இயக்கம் சார்பில் சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் திருக்குறள் மாநில மாநாடு நடைபெற்றது. இதற்கு இயக்க நிறுவனர் காமராஜ் தலைமை தாங்கினார். ஜெயலட்சுமி குத்துவிளக்கேற்றினார். மேயர் ராமச்சந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். யூனியன் வங்கி பிராந்திய தலைவர் செந்தில்குமார் இமயம் தொட்ட ஈரடி பயணம் என்ற நூலை வெளியிட்டார்.
அதை ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி உதயகுமார் பெற்றுக்கொண்டார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து திருக்குறள் பாடிய படி நடனம் ஆடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக மாநகராட்சி பொறியாளர் பழனிசாமியை, சாரட் வண்டியில் அமர வைத்து கரகாட்டம், மயிலாட்டம், மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.