சேலம் பள்ளப்பட்டி போலீசார் மெய்யனூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வேனை தடுத்து நிறுத்தியபோது, டிரைவர் மற்றும் இருவர் தப்பி ஓடினர். வேனில் இருந்த நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த சையத்முஸ்தபா (60) என்பவரை விசாரித்தபோது, பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு புகையிலை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், வேன் மற்றும் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.