சேலத்தில் தக்காளி விலை உயர்வு கிலோ ரூ. 60 வரை விற்பனை

1பார்த்தது
சேலத்தில் தக்காளி விலை உயர்வு கிலோ ரூ. 60 வரை விற்பனை
சேலம் மாநகரில் உள்ள அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி ஆகிய 4 உழவர் சந்தைகளில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது. இதனால், வழக்கமாக 16 டன் வரை வந்த தக்காளி தற்போது 13 டன்னாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த வாரம் கிலோ ரூ. 30க்கு விற்ற தக்காளி நேற்று ரூ. 40 முதல் ரூ. 45 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ. 60 வரை விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி