சேலம் மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்கமாக இன்று சேலம் மாநகராட்சி 12வது கோட்டம், ராஜகணபதி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 50 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழாவில் எம்எல்ஏ ராஜேந்திரன், மேயர் ராமசந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.