சேலம் கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்த தளபதி (24) மற்றும் காந்தி மகான் தெருவை சேர்ந்த சந்துரு (24) ஆகிய நண்பர்கள், கடந்த மாதம் 20-ந் தேதி பிரவீன் என்பவரை கத்திமுனையில் மிரட்டி ரூ. 3,500 பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் நடந்த வழிப்பறி, அடிதடி சம்பவங்களில் இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் அடிப்படையில், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார்.