சேலம்: மாணவியிடம் சில்மிஷம் செய்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்

1569பார்த்தது
சேலம்: மாணவியிடம் சில்மிஷம் செய்த கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்
எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியிடம், பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் (43) சில்மிஷம் செய்து தகாத முறையில் நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி, பாலகிருஷ்ணனைத் தாக்கி அங்கிருந்தவர்களிடம் ஒப்படைத்தார். அம்மாப்பேட்டை போலீஸார் பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கைதான கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக துறைரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி