சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கலைஞர் மாலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், மருத்துவ முகாம்கள், மரக்கன்று நடுதல், பொதுக்கூட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடத்தவும் அவர் உத்தரவிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.