சேலம் மத்திய சிறையில் கஞ்சா பொட்டலம் வீசியது யார்? விசாரணை

10பார்த்தது
சேலம் மத்திய சிறையில் கஞ்சா பொட்டலம் வீசியது யார்? விசாரணை
சேலம் மத்திய சிறைக்குள் நேற்று வெளியில் இருந்து ஒரு பொட்டலம் திடீரென விழுந்தது. சிறையின் பின்பகுதியில் இருந்து வீசப்பட்ட அந்த பொட்டலம் 15-வது பிளாக் அருகில் விழுந்தது. உதவி சிறை அலுவலர் மனோஜ் கண்டெடுத்து சிறை கண்காணிப்பாளர் வினோத்திடம் ஒப்படைத்தார். பொட்டலத்தை பிரித்தபோது 115 கிராம் கஞ்சாவும், 3 பாக்கெட் ஹான்சும் இருந்தது. வெளியில் இருந்து சிறைக்குள் கஞ்சா பொட்டலத்தை வீசியது யார் என சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி