சேலம் சூரமங்கலம் அருகே மல்லமூப்பம்பட்டி கக்கன் காலனியைச் சேர்ந்த முத்துலட்சுமி (57) நேற்று காலை வீட்டில் சுத்தம் செய்யும் போது, அறுந்து தொங்கிய மின்சார ஒயரில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் உடலை மீட்டு விசாரணை நடத்தினார். இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.