சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு மயங்கி விழுந்த 35 வயது பெண், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை அடையாளம் தெரியவில்லை. அவரது கைகளில் பச்சை குத்தப்பட்டுள்ள பெயர்கள் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.