சேலத்தில் ஓடும் ரெயிலில் 10 பவுன் நகையை தவறவிட்ட பெண்

2பார்த்தது
சேலத்தில் ஓடும் ரெயிலில் 10 பவுன் நகையை தவறவிட்ட பெண்
சேலம் கே.கே. நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (57) நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்திற்கு வந்துள்ளார். நேற்று அதிகாலை ரயில் நிலையத்திலிருந்து இறங்கும்போது, தனது கைப்பையை இருக்கையிலேயே மறந்துவிட்டார். அதில் 10 பவுன் நகை, ரூ. 3 ஆயிரம் மற்றும் செல்போன் இருந்தன. உடனடியாக சேலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். தகவலின் பேரில், ரயில்வே போலீசார் விரைந்து செயல்பட்டு, கைப்பையை மீட்டு தர்மபுரியில் ஒப்படைத்து, பின்னர் தமிழ்ச்செல்வியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
Job Suitcase

Jobs near you