பெண் கொலை வழக்கு: கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

465பார்த்தது
பெண் கொலை வழக்கு: கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகவல்லி (36) ஜனவரி 17 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது கணவர் தவசியப்பன் (54) மற்றும் உறவினர்களான மணிகண்டன் (24), விஜயன் (41), சுரேஷ் (45) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் பரிந்துரைத்ததை அடுத்து, போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான நகல் சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி