கல்பனா சாவ்லா விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழ்நாடு அரசு 2026-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இயற்கை சீற்றங்கள், விபத்துகள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ விபத்துகள், திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி போன்ற சமயங்களில் தனிநபர் துணிச்சலுடன் செயல்பட்ட பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படும். தகுதியான பெண்கள் வருகிற 19-ந் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
