சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில் (46), மகேந்திரபுரி பகுதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும்போது தவறி விழுந்து படுகாயமடைந்தார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.