சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், திருச்சி உப்பிலியாபுரத்தைச் சேர்ந்த அகல்யா என்பவரை 2018-ல் திருமணம் செய்துகொண்டார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், திருமணமான சில மாதங்களிலேயே குடும்பப் பிரச்சனை காரணமாகப் பிரிந்தனர். 2022 ஜூன் மாதம், அகல்யாவை இரும்பு ராடால் தாக்கி மணிகண்டன் கொலை செய்தார். இந்த வழக்கு சேலம் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசிங் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மணிகண்டனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.