சேலத்தில் தரைமட்ட கிணற்றில் டிராக்டருடன் பாய்ந்த பட்டறை ஓனர்

3பார்த்தது
சேலம் நரசோதிபட்டி அருகே, கிரில் ஒர்க்ஸ் பட்டறை நடத்தி வரும் வெங்கடேஷ், இன்று காலை தனது வயலில் தரைமட்ட தடுப்பு கட்டுவதற்காக கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டரில் வந்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் வயலில் இருந்த தரைமட்ட கிணற்றுக்குள் பாய்ந்து விழுந்தது. இதில், வெங்கடேஷ் டிராக்டருடன் கிணற்றுக்குள் மூழ்கினார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் வெங்கடேஷை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.