சேலம் 4 ரோடு சிறுமலர் பள்ளியில் வேர்ல்டு சோடாகான் கராத்தே ஆர்கனைஷேசன் இந்தியா சார்பில் பெல்ட் கிரேடிங் பயிற்சி நடைபெற்றது. இதில் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் கே. ரமலி ராமலட்சுமி கலந்துகொண்டு, கராத்தே பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு கருப்புப் பட்டைகளை வழங்கி வாழ்த்திப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகள் மற்றும் விளையாட்டு அகாடமிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வேர்ல்டு சோடாகான் கராத்தே அமைப்பின் கிராண்ட் மாஸ்டர் குப்புராஜ், தலைமை பயிற்சியாளர் விச்சு ஆகியோரும் கலந்துகொண்டனர்.