டேராடூன் ராணுவக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

77பார்த்தது
டேராடூன் ராணுவக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி- 2026 பருவத்தில் 8-ம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு சென்னை உள்பட குறிப்பிட்ட சில மையங்களில் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி நடைபெறுகிறது. 

இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்க வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக்கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உள்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதம் ஆகும். 

இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை "கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக்கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட் -248003" என்ற முகவரிக்கு வரைவோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் இணையதளம் www.rimc.gov.in மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you