சேலம் கோரிமேடு அருகே சோழன் நகரைச் சேர்ந்த சித்திகா (20) என்பவர், கல்லூரியில் படித்தபோது ஆட்டோ டிரைவர் ஜானைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது 2 மாதக் குழந்தை இறந்துவிட்ட நிலையில், ஜான் மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்திகா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.