சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் கடந்த 10 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பெண் கணவருடன் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறிச் சென்ற அந்த பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகள் மாயமானது குறித்து அவருடைய பெற்றோர் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணைத் தேடி வருகின்றனர்.