சேலம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்

3பார்த்தது
சேலம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்
சேலம் வீராணம் சின்னனுர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவி ஜனனி (28) காணவில்லை என்று வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு இரண்டரை வயதுடைய ஆதிசேஷன் என்ற மகனும் உள்ளார். ஜனனி எருமைபாளையத்தில் உள்ள ஒரு மில்லில் பணிபுரிந்து வருகிறார். அங்கு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவர் கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று குழந்தையுடன் வெளியே சென்ற ஜனனி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி