சேலம்: வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

76பார்த்தது
சேலம்: வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் தர்மன் (வயது 30). இவர் மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழிப்பறி வழக்கு தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் தலைமறைவான தர்மனை போலீசார் நேற்று (மே 9) கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி