சேலம் அம்மாப்பேட்டை அருகே நஞ்சம்பட்டி பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ஒருவரிடம், கடந்த 2-ஆம் தேதி சிகரெட் கேட்டுள்ளார் வீராணம் சேனை நகரைச் சேர்ந்த ரகு (22). பணம் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், ரகு டீக்கடைக்காரரை தாக்கிவிட்டு தப்பியோடினார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், நேற்று ரகு அம்மாப்பேட்டை பகுதியில் கைது செய்யப்பட்டார்.