சேலம் வீராணம் அருகே மஞ்சவாடி கணவாய் மூன்றாவது வேகத்தடை பகுதியில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருந்த வீராணம் போலீசாரின் தடையை மீறி கார் ஒன்று அப்பகுதிக்குள் வந்துள்ளது. காரில் இருந்த கோவை சோமனூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.