சேலம் கொண்டலாம்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்த யுவராஜ் மற்றும் சிவமுருகன் ஆகியோரை, மதுபோதையில் வந்த சரவணன் என்பவர் மதுபாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் இருவருக்கும் தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி சரவணனை கைது செய்தனர்.