புதிய பஸ் ஸ்டாண்டில் பணம் பறித்த வாலிபர் கைது

4பார்த்தது
புதிய பஸ் ஸ்டாண்டில் பணம் பறித்த வாலிபர் கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை ஏற்காடு செல்ல பேருந்துக்காக காத்திருந்தபோது, ​​அவரிடம் இருந்த ₹300 மற்றும் செல்போனை மர்ம நபர் பறித்துச் சென்றார். அருண்குமாரின் நண்பர்கள் அந்த நபரைப் பிடித்து பள்ளப்பட்டி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் சேலம் பள்ளப்பட்டி வண்டி பேட்டியைச் சேர்ந்த சாமியப்பன் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் சாமியப்பனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.