சேலத்தில் பஸ்ஸில் செல்போன் திருடிய வாலிபர் கைது

3பார்த்தது
சேலத்தில் பஸ்ஸில் செல்போன் திருடிய வாலிபர் கைது
சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயல்காடு பகுதியை சேர்ந்த திலீப்ராஜ் (20) நேற்று அரசு டவுன் பஸ்ஸில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த சஞ்சய் (27) என்பவர் திலீப்ராஜின் செல்போனை பறித்துக்கொண்டு ஓடினார். சக பயணிகளின் உதவியுடன் திலீப்ராஜ் அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீஸிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர் மேட்டூர் மாதையன் குட்டை மேல் காலனியை சேர்ந்த சஞ்சய் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி