சேலத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

6பார்த்தது
சேலத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
சேலம் அந்தோனிபுரம் பகுதியைச் சேர்ந்த சத்தியம்மா (55) என்பவர் சேலம் ஜங்சன் ரயில் நிலையம் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன், ஒரு வாலிபர் தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு, திடீரென சத்தியம்மா கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினார். இது குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், சங்கிலியைப் பறித்துச் சென்றவர் சேலம் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்த இந்தர் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி