சேலத்தில் தொழிலாளியை மிரட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது

1133பார்த்தது
சேலத்தில் தொழிலாளியை மிரட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது
சேலம் கிச்சிப்பாளையம் அருகே டூவீலரில் சென்ற தொழிலாளி பாலாஜியிடம் (21) செல்போன் மற்றும் டூவீலரை மிரட்டி பறித்துச் சென்ற 4 பேரைத் தேடி வந்த கிச்சிப்பாளையம் போலீசார், அவர்களில் ஒருவரான மோகனை (25) நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேட்டூர் வீரக்கல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகனான பாலாஜி, சேலம் கிச்சிப்பாளையம் காந்திநகர் சுடுகாடு அருகே சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி