சேலம் இரும்பாலையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

0பார்த்தது
சேலம் இரும்பாலையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தாரமங்கலம் எம். ஜி. ஆர். காலனி பகுதியைச் சேர்ந்த 25 வயது மதன்குமார், சேலம் இரும்பாலை பகுதியில் தொழில் பழகுனராக வேலை பார்த்து வந்தார். மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த அவர், முதலில் சேலம் இரும்பாலை மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி