கோரிமேடு அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி வாலிபர் பலி

3பார்த்தது
கோரிமேடு அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி வாலிபர் பலி
சேலம் சின்னகொல்லப்பட்டி ராஜகணபதி தெருவை சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணமூர்த்தி (33), நேற்று முன்தினம் இரவு சாலையை கடக்க முயன்றபோது, கோரிமேட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you