சேலம் அரிசிபாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் நோவாடொமினிக் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.