தாரமங்கலம் அருகே கோணகாப்பாடி பகுதியைச் சேர்ந்த மோகன் (22), 2021-ல் 16 வயது பிளஸ்-1 மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோகனை போலீஸார் கைது செய்தனர். சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த மோகனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீபா தீர்ப்பளித்தார்.