தாரமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

85பார்த்தது
தாரமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கருக்குப்பட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சூதாடியவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் குள்ளானூரை சேர்ந்த நந்தகுமார் (வயது24), ராதாகிருஷ்ணன் (40), சரவணன் (34), குமார் (50), கருக்குப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (35), மணி (39), பிரபாகரன் (27) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி