நேற்று அதிகாலை 2 மணியளவில் தாரமங்கலம் எமராஜன் வளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜாகவுண்டரின் செம்மறி ஆடுகளை வெறிநாய் தாக்கியதில் 7 ஆடுகளும், ஒரு ஆட்டுக்குட்டியும் பரிதாபமாக இறந்தன. ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வரதராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடைத்துறை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.