சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மாமனார் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோவைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். சங்ககிரி அருகே வலையக்காரனூர் பகுதியில் காரின் முன்பக்க டயர் வெடித்ததால், கார் சாலையோர தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்துக்கான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.